நடிகர்கள் : ஷாந்தனு பாக்கியராஜ், சானாக்கான், சத்தியராஜ், கஞ்சா கருப்பு, மற்றும் பலர்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம் : எஸ்.பி.ஹோசிமின்
தயாரிப்பு : எச்.எம்.ஐ .பிக்ச்சர்ஸ்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம் : எஸ்.பி.ஹோசிமின்
தயாரிப்பு : எச்.எம்.ஐ .பிக்ச்சர்ஸ்
மதுரை, ரவுடி, போலீஸ், என்கவுண்டர் என்ற மசாலாக்களோடு வந்திருக்கும் மற்றொரு படம்!
மதுரையில் வாழும் ரவுடி சத்யராஜ் மக்களுக்கு முகம் காட்டாத மனிதராக வாழ்ந்துவருகிறார். அவரை என்கவுண்டரில் போடச் சொல்லி போலீஸ் டீம் வலியுறுத்த கமிஷனர் அனுமதி மறுக்கிறார். கூடவே மூன்று மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். இந்த மூன்று மாத இடைவெளியில் சத்யராஜ் தன் கனவு புராஜெக்ட்டான மில் கட்டும் வேலையைத் தொடங்க, அதற்கான இடத்தில் உள்ள வீடுகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் அவருடைய ஆட்கள். இதில் ஒருவர் மட்டும் விலைக்குத் தரமாட்டேன் என்கிறார். அந்த ஒருவர்தான் சாந்தனு.
இந்த டீலிங்கின்போது சாந்தனு ஏதோ சத்யராஜின் ரைட் ஹேண்ட் என்பதுபோன்ற
பழகிப் போன கதை என்பதுகூடப் பரவாயில்லை... பழகிய பாதையிலேயே பயணிக்கிறது என்பதுதான் அலுப்பாக இருக்கிறது.
சாந்தனுவுக்கு முகபாவங்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. உடல் மொழியிலும் கொஞ்சம் கடினமாகத்தான் தோன்றுகிறார். கொஞ்சம் உடம்பைக் குறைத்து முகபாவங்களை ஏற்றினால் நன்றாக இருக்கும்.
சாந்தனு படத்தில் அடிக்கும் கமெண்ட் போலத்தான் சனாகான் ஜப்பான் மூக்கும் சைனா முழியுமாக வருகிறார். பெரிதாக இம்ப்ரஸ் பண்ணவில்லை.
பாடல்கள் ஸ்ரீகாந்த் தேவா! வழக்கமான பாணியில் வந்து போகிறது.
இயக்குனர் ஹோசிமின் ஷங்கரின் தயாரிப்பு. ஆனால், அவரிடமிருக்கும் சின்னச் சின்ன சர்ப்ரைஸ்களை இவரிடம் காணவில்லை.
அடுத்த முறையாவது அதை எதிர்பார்க்கலாமா சார்?!