நடிகர்கள்: பிரசன்னா, சேரன், ஹரிப்ரியா, நிகிதா, சுமா, ஜெயபிரகாஷ், மற்றும் பலர்
இசை: சாஜன் மாதவ்
இயக்கம் : ராஜன் மாதவ்
தயாரிப்பு & வெளியீடு : டீரீம் தியாட்டர்ஸ் & யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ்
புதிய இயக்குனர் ராஜன் மாதவ் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். ஆனால், விறுவிறுப்பாகச் சொல்ல வேண்டியதை கொஞ்சம் இழுவையாகச் சொல்லியிருப்பதுதான் சறுக்கலாக இருக்கிறது.
சேரனும் பிரசன்னாவும் பெங்களூர் சென்னை ஹைவேயில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது பரஸ்பரம் தங்கள் வாழ்க்கைப் பிரச்னையைச் சொல்லிக் கொள்ள, எதிலேயும் ரிஸ்க் எடுப்பதை விரும்பும் பிரசன்னா சேரனின் மனைவியைக் கொலை செய்து அவருக்கு உதவுவதாகச் சொல்கிறார். பதிலுக்கு தனக்கு துரோகம் செய்த தந்தையைக் கொல்லச் சொல்கிறார். சொன்னபடி பிரசன்னா செய்துவிட, சேரன் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். இந்தச் சூழலை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் முரணின் மொத்த வடிவம்.
சேரனுக்கு அல்வா கதாபாத்திரம். சதா சோக முகத்தோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் மனைவி கொடுமையால் சோகம்... அவர் இறந்த பிறகு பிரசன்னா கொடுமையால் சோகம். மற்ற உணர்ச்சிகள் மல்லுக்கட்டத்தான் செய்கின்றன.
நாயகியாக ஹரிப்ரியா..! சேரனின் வழக்கமான நாயகிகள் வரிசையில் தன்னம்பிக்கை கொடுப்பவராக வந்து போகிறார்.
படத்தின் இசை சாஜன் மாதவ். பல இடங்களில் கிடார் உலுக்குகிறது. பாடல்கள் ஓகே ரகம்!
RATING
இசை: சாஜன் மாதவ்
இயக்கம் : ராஜன் மாதவ்
தயாரிப்பு & வெளியீடு : டீரீம் தியாட்டர்ஸ் & யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ்
எனக்கு அப்பா சரியில்லை... உனக்கு மனைவி சரியில்லை... இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே என்று வழியில் சந்திக்கும் பிரசன்னா சேரனிடம் சொல்லும் ஒரு வரிதான் படத்துக்கான ஆதாரம்!
புதிய இயக்குனர் ராஜன் மாதவ் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். ஆனால், விறுவிறுப்பாகச் சொல்ல வேண்டியதை கொஞ்சம் இழுவையாகச் சொல்லியிருப்பதுதான் சறுக்கலாக இருக்கிறது.
சேரனுக்கு அல்வா கதாபாத்திரம். சதா சோக முகத்தோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் மனைவி கொடுமையால் சோகம்... அவர் இறந்த பிறகு பிரசன்னா கொடுமையால் சோகம். மற்ற உணர்ச்சிகள் மல்லுக்கட்டத்தான் செய்கின்றன.
பிரசன்னா கதையில் வில்லன் என்றாலும் படத்தில் ஹீரோ. எல்லா வில்லத்தனங்களையும் தான் செய்துவிட்டு அப்பாவைப் போட்டுத்தள்ள பிளான் போடும் பணக்கார பிள்ளையாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வில்லனாக ஒரு வலம் வரலாமே பிரசன்னா!
படத்தின் இசை சாஜன் மாதவ். பல இடங்களில் கிடார் உலுக்குகிறது. பாடல்கள் ஓகே ரகம்!
இவ்வளவு கேடியாகத் திட்டமிடும் பிரசன்னா எதற்காக அப்பாவி சேரனை கொலைக்கருவியாகப் பயன்படுத்த வேண்டும். அவரே ஒரு ஆள் வைத்து அப்பாவைப் போட்டுத் தள்ளியிருக்கலாமே என்ற ஆதாரக் கேள்வி அடிக்கடி உறுத்துகிறது. அதற்கு பதில் இல்லை!
அதுதான் முரண்..!RATING
No comments:
Post a Comment
welcomeee