Monday, August 8, 2011

போட்டா போட்டி-ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

நடிகர்கள்: சடகோப்பன் ரமேஷ், அரிணி மற்றும் பலர்
இசை    : அருள் தேவ்
ஒளிப்பதிவு    : கோபி அமர்னாத்
இயக்கம்      : யுவ்ராஜ்
தயாரிப்பு   & வெளியீடு    : எ.வி.ஆர் டாக்கீஸ்/ஃபிலிக்கர் ஸ்டுடியோ



தையென்று ஏதும் தேவையில்லை... லாஜிக்கெல்லாம் பார்க்க வேண்டாம்... கலகலப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் உட்கார்ந்தால் உற்சாகமாக வெளியே வரலாம். அப்படி ஒரு அதிரிபுதிரி எண்டர்டெயினரைக் கொடுத்திருக்கிறது போட்டா போட்டி படக்குழு!

பக்காவான பட்டிக்காட்டில் படித்த ஒரே பெண்ணாக இருக்கும் ரஞ்சிதத்தைக் கட்டிக்கொள்ள முறைமாமன்கள் இருவர் போட்டி போடுகிறார்கள். அதில் ஒருவருக்கு ரஞ்சிதத்தின் மீது காதல்... இன்னொருவருக்கு ரஞ்சிதம் அப்பா சேர்த்து வைத்திருக்கும் சொத்து மீது காதல்! ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு என்று ஆளாளுக்கு ஒரு போட்டியைச் சொல்ல ஒரு பொடியன் கிரிக்கெட் வையுங்கப்பா... என்கிறான். ரஞ்சிதமும் அதை ஆமோதிக்க, இருவரும் அணி சேர்த்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக வரும் சடகோபன் ரமேஷும் ரஞ்சிதமும் லவ்வுகிறார்கள். முடிவு என்ன என்பதை நீங்களே யூகித்து விடலாம். ஆனாலும் யூகிக்காத பல சர்ப்ரைஸ்களைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் யுவராஜ்.

ஆர்.பார்த்திபனின் குரலில் (குரல் மட்டும்தான்!) அறிமுகமாகும் கிராமமும் அதன் மைனரும் ஆரம்பத்திலேயே இது ஜாலி களம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதையடுத்து அடுக்கப்பட்டுக் கொண்டே போகும் காட்சிகளில் கதை நகராவிட்டாலும் கலகலப்பு இருக்கிறது. அதிலும் ஊசிப்பட்டாசாக வந்து விழும் வசனங்கள்தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதனாலேயே சடகோபன் ரமேஷ் தொடங்கி சைடில் நிற்கும் ஆர்டிஸ்ட் வரையில் யாருமே நடிக்காமல் வந்து நின்று வசனம் பேசுவது உறுத்தாமல் போகிறது. அந்த வகையில் இது முழுக்க முழுக்க இயக்குனரின் படம்!

கிரிக்கெட் என்றாலே என்னவென்று தெரியாமல் அது எப்படிப்பட்ட ஆட்டம்டா என்று கேட்கும் மைனர் அடுத்தக்கணமே பயிற்சியளிக்க யாரைப் போடலாம் என்று கேட்டுவிட்டு, ‘ஏண்டா... இந்த சச்சின் என்ன பண்றான் இப்போ?’ என்பது லாஜிக்கை மீறிய சரவெடி! இதுபோல படம் நெடுக நிறைய இருக்கின்றன. அதிலும் முட்டாள் மைனரும் அவருக்கேற்ற மங்குணிப் பாண்டி எடுபிடியும் சூப்பரான காம்பினேஷன்.
கதாநாயகியைப் பற்றிச் சொல்வதனால் படத்தில் ரமேஷ் சுமார் பிகர்னு சொன்னே... ரொம்ப சுமாரான பிகர் போலிருக்கே! என்பார். நடிப்பைப் பொறுத்தவரையில் ரமேஷ் சொன்ன வசனம்தான் சரியான விமர்சனம்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் யுவராஜின் பலமான ஏரியா! குறிப்பாக இரவுக் காட்சிகளில் நாடகத்தனம் இல்லாத ஒளிப்பதிவில் தனித்துத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர்.
ரொம்ப விளையாட்டாகக் கதை சொல்லிவிடக் கூடாதே என்று சட்டென்று சீரியஸாக மலையை உடைக்கும் அல்லையன்ஸ் கம்பெனியைக் கதைக்குள் கொண்டுவந்து தன் சமூக அக்கறையைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த அக்கறை காரணமாக அணிக்குள் வரும் ஊர் மக்களிடம் விளையாட்டில் அந்த உணர்வைக் கொண்டுவரத் தவறிவிட்டார்.

நம் இந்திய கிரிக்கெட் அணி போலத்தான் இயக்குனர் யுவராஜும்... பலவீனமான
பந்துவீச்சை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங் வரிசையில் பிரகாசிக்கும் (இங்கிலாந்து டூர் பற்றிச் சொல்லவில்லை) நம் அணியைப் போல பலவீனமான ஏரியாக்களை மறக்க வைத்து சிரிப்பு சிக்ஸர் அடித்திருக்கிறார்.


No comments:

Post a Comment

welcomeee